தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு முகாம்


தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு முகாம்
x

நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு முகாம், நிலக்கோட்டையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதையொட்டி நிலக்கோட்டை அருகே உள்ள என்.கோவில்பட்டியில் உள்ள மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் மையத்துக்கு நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் இருந்து தனித்தனியாக பிரித்து இயற்கை உரம் தயாரித்தல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தனியாக விற்பனை செய்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் பேரூராட்சி துணைத்தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சடகோபி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா, ராமன் மற்றும் சுகாதார பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story