வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்


வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பயிர் மேலாண்மைக்கான வேளாண் வானிலை, கைபேசி செயலிகள் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் உலக வானிலை தினம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.

முகாமில் தூத்துக்குடி தோட்டக்கலை துணை இயக்குனர் சுந்தரராஜன் கலந்துகொண்டு கால நிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தை மீட்டெடுக்கும் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர். சஞ்சீவி ராஜ் கால்நடை வளர்ப்பில் காலநிலை மாற்றத்தின் பங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்தும் பேசினர்.

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் பழனி வேலாயுதம், வேளாண் பயில்களில் காலநிலை மாற்றத்தின் பங்கு மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் அதற்கான கைபேசி செயலிகள் தேவைகளும் பற்றி பேசினார்.

முகாமில் உதவி பேராசிரியர் ஆர்த்தி ராணி வேளாண் வானிலை முன்னறிவிப்பு மற்றும் அதற்கான கைபேசி செயலிகள் குறித்தும், உதவி பேராசிரியர் கோகிலவாணி, மற்றும் உதவி பேராசிரியர் ஆனந்தி ஆகியோர் காலநிலை மாற்றத்தின் பங்கு குறித்து விவரித்தார்கள்.

முகாமில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 80 விவசாயிகள் கலந்து கொண்டார்கள். உலக வானிலை தினத்தையொட்டி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. உதவி பேராசிரியர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story