விழிப்புணர்வு முகாம்
நெல்லையில் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தொழிற்சாலைகளில் ஏற்படும் மரண விபத்துகள், இதர விபத்துகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக கண்காணித்து குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றான ெதாழிற்சாலைகளின் நிர்வாகத்தினருக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தும்படி தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு நெல்லையிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு நாகர்கோவிலிலும் வைத்து தனித்தனியாக விழிப்புணர்வு முகாம் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனரால் நடத்தப்பட்டது.
இந்த முகாம்களில் மொத்தம் 179 நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். இதில் விபத்துகளை தடுப்பது தொடர்பாகவும், தொழிற்சாலையை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம்கள் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ராஜசேகரன் தலைமையில் நடந்தது. இதில் நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் நிறைமதி, துணை இயக்குனர்-2 சஜின், உதவி இயக்குனர்-1 கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.