குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு
நெமிலி போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி போலீசார் சார்பில் உளியநல்லூர், துறையூர் பகுதிகளில் வழிப்பறி சம்பவங்களை தடுப்பது குறித்தும், சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் போலீசாரிடம் தகவல் தெரிவிப்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி கலந்துகொண்டு பேசுகையில், 'வேலைக்கு சென்று வரும் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது தனியாக வருவதை தவிர்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரையாவது கண்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை பொருட்கள் யாராவது விற்பனை செய்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.
இதில் நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிலு, லோகேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story