ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி


ஆவணி அவிட்டம் பூணூல் அணியும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 31 Aug 2023 12:30 AM IST (Updated: 31 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி வட்டாரத்தில் உள்ள கோவில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி வட்டாரத்தில் உள்ள கோவில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் பூர்ண புஷ்கலாதேவி கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வேளார் வம்சாவழி பரம்பரை ஸ்தானீகம் 11 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர். முடிவில் சேவகப்பெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு முப்புரி நூல் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்களிடம் வேளார் வம்சாவழி பூஜகர்கள், விஸ்வகர்மா சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் முப்புரி நூல் அணிந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் சிங்கம்புணரியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும், காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story