ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி உறையூர் குறத்தெருவில் ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் நடராஜா தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு கவுன்சிலர் சுரேஷ், தரைக்கடை சங்கம் மாவட்ட செயலாளர் அன்சர்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும், கேரளாவை போன்று தமிழக அரசு செயலியை உருவாக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், மானிய விலையில் பெட்ரோல், டீசல், கியாஸ் வழங்கிட வேண்டும். காவல்துறை ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.


Next Story