ஆட்டோ திருடிய வாலிபர் கைது


ஆட்டோ திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2022 12:30 AM IST (Updated: 23 Sept 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

அய்யலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 26). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், தனது ஆட்டோவை அய்யலூர் ரெயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் அதிகாலையில் வந்து பார்த்தபோது ஆட்டோ திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், ஆட்டோவை திருடியது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் (33) என்பது தெரியவந்தது. இதற்கிடையே ஆட்டோவை திருடிச்சென்ற ரெங்கராஜ் ரோந்து பணியில் இருந்த வையம்பட்டி போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. பின்னர் அவர்கள் ரெங்கராஜை வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரெங்கராஜை வடமதுரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


Next Story