அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; கணவர் காயம்


அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; கணவர் காயம்
x
தினத்தந்தி 25 Oct 2023 3:21 AM IST (Updated: 25 Oct 2023 3:33 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். கணவர் காயம் அடைந்தார்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். கணவர் காயம் அடைந்தார்.

ஆட்டோவில் சென்றனர்

அம்மாபேட்டை கேசரிமங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). அவருடைய மனைவி இந்திராணி (38). இவர்கள் 2 பேரும் வாரச்சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி குருவரெட்டியூரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செந்தில்குமாரும், இந்திராணியும் சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை செந்தில்குமார் ஓட்டினார். அருகில் இந்திராணி அமர்ந்து இருந்தார்.

ஆட்டோ கவிழ்ந்தது

அம்மாபேட்டை சிங்கம்பேட்டை சின்ன பள்ளிக்கூடம் என்ற இடம் அருகே சென்றபோது நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இந்திராணி படுகாயம் அடைந்தார். செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இந்திராணியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் பலி

அதன்பின்னர் மேல்சிகிச்அம்மாபேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி; கணவர் காயம்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story