ஆட்டோ மோதி முதியவர் பலி


ஆட்டோ மோதி முதியவர் பலி
x

புளியங்குடியில் ஆட்டோ மோதி முதியவர் பலியானார்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 67). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலையில் புளியங்குடி பள்ளிவாசல் பஸ் நிறுத்தம் அருகில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோ எதிர்பாராதவிதமாக சைக்கிளின் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த கணேசனுக்கு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story