சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை


சேலம் மாவட்டத்திற்கு ஆக. 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை
x

சேலம் மாவட்டத்திற்கு அடுத்த மாதம் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story