"காவலர்களுக்கு அறிவுத்திறன், செயல்திறனை விட மனப்பான்மை மிக முக்கியம்" - டி.ஜி.பி. சைலேந்திர பாபு
காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தூய வளனார் கல்லூரி வளாகத்தில், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தலைமையில், 'காவல்நிலைய மரணங்கள் தடுப்பு' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், காவலர்கள் குற்றவாளிகளை கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் எனவும், அறிவுத்திறன்ம் செயல்திறனை விட காவல்துறையினருக்கு மனப்பான்மை மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.
மேலும் சிறுவயதில் பிரச்சினைகளில் ஈடுபட்டவர்கள், திருநங்கைகள் என பலர் படித்து தற்போது காவல்துறையில் அதிகாரிகளாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களைக் கொண்டே வாக்குவாதத்தில் ஈடுபடும் இளைஞர்கள், திருநங்கைகள் ஆகியோரின் பிரச்சினைகளை கையாள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story