சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயற்சி


சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Sept 2023 12:30 AM IST (Updated: 24 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.எஸ்.பிள்ளை தெருவை சேர்ந்த செல்வகுமார் மனைவி ஜெயலட்சுமி (வயது 42). இவரது கணவர் இறந்துவிட்டதால் ஜெயலட்சுமி தற்போது கடையநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் ேவலைக்கு சென்றுவிட்டு, செங்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென்று ஜெயலட்சுமி தலையில் தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்டு ஜெயலட்சுமி சங்கிலியை இறுகபிடித்துக் ெகாண்டு, சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்மநபர் அருகில் உள்ள தென்னை நாற்றுபண்ணை வழியாக தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story