கத்தியால் வயிற்றில் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி
கொடைக்கானல் மதுபான பாரில், கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில், தனியார் மதுபான பார் செயல்படுகிறது. இங்கு, நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர், தான் வைத்திருந்த கத்தியால் தனது வயிற்றில் குத்தி கிழித்தார். சிறிதுநேரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருச்சியை சேர்ந்த திப்புசுல்தான் (வயது 28) என்று தெரியவந்தது. கொடைக்கானலை அடுத்த கூக்கால் கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.