அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில்மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சிகுல்லா அணிந்து வந்த நபர் குறித்து விசாரணை

அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில்மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சிகுல்லா அணிந்து வந்த நபர் குறித்து விசாரணை
x

அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. குல்லா அணிந்து வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

கருப்பூர்

அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மேற்கூரையை உடைத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. குல்லா அணிந்து வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கியில் கொள்ளை முயற்சி

சேலம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை வங்கியின் வலதுபுறத்தில் உள்ள கல்லூரியின் உடற்கல்வித்துறை அலுவலக அறையின் வழியாக வங்கியின் மேற்கூரையை பிரித்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்ததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

காலையில் துணை மேலாளர் வங்கியை திறந்து உள்ளே சென்ற போது அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது வங்கியின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கிடந்தது. கம்ப்யூட்டர் பொருட்கள் சிதறி கிடந்தன.

போலீசார் விசாரணை

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வங்கியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் மர்மநபர் ஒருவர் தலையில் மங்கி குல்லா அணிந்து கொண்டும், கைகளில் உறை அணிந்து கொண்டும் வங்கிக்குள் வந்து சென்றது தெரிய வந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story