பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு ஒரு பெண் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று அந்த பெண் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தப்பள்ளியை சேர்ந்த அம்பிகா (வயது 36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் கூறியதாவது:-

மகளை பிரிக்க முயற்சி

எனக்கு, என் தாய்மாமா குமார் (43) என்பவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளாள். எனக்கும், என் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் நான் வீட்டில் வைத்திருந்த 30 பவுன் நகைகள், ரூ.83 ஆயிரம் மற்றும் 2 மாடுகள் உள்ளிட்டவற்றை என் கணவர் குமார் எடுத்து சென்றார். எனது மகளையும் கணவர், என்னிடம் இருந்து பிரிக்க முயற்சி செய்கிறார். இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார், அம்பிகாவை சமாதானப்படுத்தி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


Next Story