பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே ஒரு பெண் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அவரை அந்த பகுதியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஅள்ளி கிராமத்தை சேர்ந்த உமாராணி (வயது 40) என தெரியவந்தது.பெங்களூருவில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் தனக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் தீக்குளிக்க முயன்றதாகவும் அவர் கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
Related Tags :
Next Story