புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி - கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு


புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி - கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு
x

புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

பஞ்சாப் மாநிலத்தில் வேதாந்தா குழுமத்தின் அங்கமான தல்வண்டி சபோ மின்நிறுவன கட்டுமானத்துக்காக சீனாவை சேர்ந்த 263 பேருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக விசா பெற உதவியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி., அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் உள்ளிட்டவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

சம்பவம் நடந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.ஐ. கடந்த 14-ந் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சி.பி.ஐ. தலைமையகத்துக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று வந்தார். அவரிடம் விசா முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டு, சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டை கார்த்தி சிதம்பரம் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் சி.பி.ஐ விசாரணை குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரெய்டு எனக்கு புதிதல்ல. என்னுடைய வீட்டில் 6 முறை ரெய்டு நடத்தி எதை கண்டுபிடித்தார்கள். புலன் விசாரணை என்ற பெயரில் மன உளச்சலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

27 மணி நேரம் என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்ன கேள்வி கேட்டனர் என்பதை வெளியிடாமல் இருப்பது ஏன்?. என் தந்தை வைக்கும் வாதங்களை எதிர்கொள்ள முடியாமல், என்னை தாக்குகிறார்கள் என்று கூறினார்.


Next Story