கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி


கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி
x

கோவில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது.

திருச்சி

திருச்சி தென்னூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் (வயது 56). இவர் அண்ணாநகர் சிவபிரகாசம்சாலை பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார்.

சம்பவத்தன்று பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவில் பூட்டப்பட்டது. இதனையடுத்து மறுநாள் காலையில் அனந்த பத்மநாபன் கோவிலை திறக்க வந்தார். அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ஆனால் எந்த பொருட்களும் திருட்டு போகவில்லை. யாரோ மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அவர்கள் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

இது குறித்து அனந்த பத்மநாபன் தில்லைநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story