புரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல்
சங்கரன்கோவிலில் புரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது மகன் முகமது இப்ராகிம் (வயது 23). இவர் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு புரோட்டா கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்துக் கொண்டு கழுகுமலை சாலையில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அயூப்கான் மகன் ஷேக் மைதீன் என்பவர் இப்ராகிமிடம் ஏன் தேவையில்லாமல் ரோட்டில் நிற்கிறாய் என்று தகராறு செய்து அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முகமது இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story