வியாபாரி உள்பட 2 பேர் மீது தாக்குதல்
வியாபாரி உள்பட 2 பேரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை ரெட்டியார்பட்டி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 62). வியாபாரியான இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் கார்த்திகேயன் நகரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் முருகன் ஓட்டிவந்த சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முருகனுக்கு மிரட்டல் விடுத்து அவரை தாக்கி சைக்கிளை சேதப்படுத்தி சென்றார்..
இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
இதேபோல் திசையன்விளை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர்வர் அருள் பெனிட். இவர் திசையன்விளை முருகேசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்றுகொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த இடைச்சிவிளையை சேர்ந்த மணி (32), முத்து (35) ஆகியோர் அருள் பெனிட் சட்டை பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் 2 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திசையன்விளை போலீசில் அருள்பெனிட் புகார் செய்தார். அதனந்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து மணி, முத்து ஆகியோரை தேடி வருகிறார்.