ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிய கார்டை எடுக்க போராடிய முன்னாள் ராணுவ வீரர்


ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிய கார்டை எடுக்க போராடிய முன்னாள் ராணுவ வீரர்
x

ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிய கார்டை எடுக்க முன்னாள் ராணுவ வீரர் போராடினார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 60). முன்னாள் ராணுவ வீரர். இவர் ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். ஏ.டி.எம். கார்டை சொருகி விவரங்கள் அளித்த பிறகும் பணம் வருவதற்கு 20 நிமிடத்திற்கும் மேலானது. ஆனால் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி தனது செல்போனிற்கு வந்த நிலையில் பணம் கைக்கு வராததால் அதிர்ச்சியடைந்த மனோகரனுக்கு 20 நிமிடத்திற்கு பிறகே ஏ.டி.எம். எந்திரம் பணம் வழங்கியது. பணம் வழங்கிய ஏ.டி.எம். எந்திரம் ஏ.டி.எம். கார்டை வழங்கவில்லை. மேலும் பல்வேறு விதங்களில் முயற்சித்தும் ஏ.டி.எம். கார்டு வெளியில் வராததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனோகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏ.டி.எம். கார்டுக்காக ஏ.டி.எம். மையத்திலேயே காத்திருந்தார். ஒரு மணி நேரம் கழித்தே ஏ.டி.எம். கார்டை எடுக்க முடிந்தது. இதற்கு நிரந்தர தீர்வு செய்ய சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story