ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார் பள்ளிகளில் ஆண்டு விழா


ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார்  பள்ளிகளில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சி.சண்முகசுந்தரம் நாடார் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சி. சண்முகசுந்தர நாடார் பள்ளிகளின் 17-வது ஆண்டு விழா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

முதல் நாள் ஆங்கில கல்வி மாணவ, மாணவியருக்கான ஆண்டு விழாவும், இரண்டாம் நாள் தமிழ் வழி கல்வி மாணவ மாணவியருக்கான ஆண்டு விழாவும் நடைபெற்றது.

விழாக்களுக்கு பள்ளிகளின் செயலாளர் சென்னை சரவணா ஸ்டோர் உரிமையாளர் ச.ராஜரத்தினம் நாடார் தலைமை தாங்கினார். பள்ளிமுதல்வர் ஏ.பி.இ. ரஞ்சித் சிங் வரவேற்று பேசினார். மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் நிஷா ஜேம்ஸ், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ் எமரன்ஸ், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் எம்.எஸ்.ஜி. கிரிஜா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.

நிகழ்ச்சியில் சி. சண்முகசுந்தரம் நாடார் பள்ளி கல்வி அறக்கட்டளை தலைவர் ரேவதி ராஜரத்தினம், சென்னை சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குனர் சபாபதி ராஜரத்தினம், பள்ளி கல்வி அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் ச. யோகேஷ் ஸ்ரீ ரத்தினம், சுனிதா சபாபதி, ச.ரோஷன் ஸ்ரீ ரத்தினம்,

ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினா். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

.நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அதிகாரி எஸ்.கந்தசாமி, ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பள்ளி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


Next Story