நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி


நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி
x

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்தது.

திருவட்டார் கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்து வருகின்றன. நேற்று தடகளப் போட்டிகள் நடந்தன. திருவட்டார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 650 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story