பொய் சொல்லியே கட்சியை வளர்க்க நினைக்கிறார் அண்ணாமலை; ஆதித்தமிழர் நிறுவன தலைவர் அதியமான் பேட்டி
பொய் சொல்லியே கட்சியை வளர்க்க நினைக்கிறார் அண்ணாமலை என்று சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் நிறுவன தலைவர் அதியமான் கூறினார்.
சத்தியமங்கலம்
பொய் சொல்லியே கட்சியை வளர்க்க நினைக்கிறார் அண்ணாமலை என்று சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் நிறுவன தலைவர் அதியமான் கூறினார்.
பொய் சொல்கிறார்
சத்தியமங்கலம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் பேரவையின் ஈரோடு வடக்கு மாவட்ட மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவன தலைவர் அதியமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ேபாது அவர் கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியில் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கு எதைச்செய்ய வேண்டுமோ அதைவிட அதிகமாக சிறப்பாக செய்து வருகிறார். பா.ஜ.க.வை சேர்ந்த மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு எப்படி பேச வேண்டும் என்பதே அவருக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு பொய்யை 10 முறை திரும்ப திரும்பக் கூறினால் அது உண்மை ஆகி விடாது. பொய்யை சொல்லியே கட்சியை வளர்க்க நினைக்கிறார் அவர். அது ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது.
கொத்தடிமையாக...
அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் கொத்தடிமையாக செயல்பட்டு வருகிறார்கள். பா.ஜ.க. சொல்லும் வேலையைத்தான் அ.தி.மு.க.வினர் செய்து வருகிறார்கள். இந்த நிலை எவ்வளவு நாட்களுக்கு என்பது இனிமேல் தான் தெரியும்.
இவ்வாறு அதியமான் கூறினார்.
முன்னதாக மாநாட்டுக்கு ஆதித்தமிழர் நிறுவன மாவட்ட செயலாளர் பெ.பொன்னுசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் ராஜசேகர், ரமேஷ்குமார், சேகர், கலைவாணி, பசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. மாநில மாணவர் அணி தலைவர் ஆர்.ராஜீவ் காந்தி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, சமூக ஆர்வலர் ஸ்ரீ ராம் ஆகியோர் பேசினார்கள்.
ஆளுயர ரோஜா மாலை
ஆதித்தமிழர் பேரவை நிறுவனத்தலைவர் அதியமானுக்கு வடக்கு மாவட்டத்தின் சார்பில் ஆள் உயர ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது. மாநாட்டில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, மாநில நிதி செயலாளர் பெருமாவளவன், மாநில துணைப்பொதுச் செயலாளர் செல்வ வில்லாளன், மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளையை சேர்ந்த நிர்வாகிகள், பேரவையைச் சேர்ந்த ஆண் களும், பெண்களும் என ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார் வரவேற்று பேசினார். முடிவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குமுதா நன்றி கூறினார்.