அத்திக்கடவு-அவினாசி திட்டம் அண்ணாமலைக்காக தொடங்கப்படவில்லை: அமைச்சர் முத்துசாமி
திட்டத்தை கொண்டுவர அதிகாரிகள் இரவு பகலாக உழைத்ததாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சென்னை,
தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விரைவாக முடிக்க முழுமுதற் காரணம் முதல்-அமைச்சர்தான். உபரி நீரை மட்டும் இந்த திட்டத்தில் எடுக்க வேண்டுமென ஒப்பந்தத்தில் உள்ளது. தற்போது உபரி நீர் கிடைத்துள்ளதால், திட்டம் தொடர்பாக சோதனை நடைபெற்றது. அதில், மொத்தமுள்ள 1,045 குளங்களில் சில குளங்களை தவிற அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சேருவதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
அண்ணாமலை போராட்டம் அறிவித்ததால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்படவில்லை. போதுமான தண்ணீர் வந்ததால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்தை கொண்டுவர ஒருநாளைக் கூட வீணாக்காமல் அதிகாரிகள் இரவு பகலாக உழைத்தனர்."
இவ்வாறு அவர் பேசினார்.