வைகை அணை பண்ணையில் 40 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்க்க இலக்கு
வைகை அணை மீன் பண்ணையில் 40 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்வளத்துறையின் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த மீன்பண்ணை வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரமாண்ட தொட்டிகளில் நுண்மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மீன்கள் சுமார் 50 நாட்கள் வளர்ந்த நிலையில் வைகை அணை, சோத்துப்பாறை, சண்முகாநதி, மஞ்சளாறு உள்ளிட்ட வெளி மாவட்ட அணைகளில் விடப்படும். மேலும் தனியார் மீன் பண்ணைகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டில் வைகை அணை மீன்பண்ணையில் 40 லட்சம் மீன்குஞ்சுகள் வளர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story