விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு பைரவருக்கு பால், தயிர், சந்தனம், சீயக்காய், இளநீர், பச்சரிசி, தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூ, வில்வ இலை, வடை உள்ளிட்ட பொருட்களை கொண்டு மாலை அணிவித்து சிறப்பு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவருக்கு அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.
Related Tags :
Next Story