தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுவப்பட்டு நீண்டகாலம் ஆவதால், அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருகின்றன. சில நேரங்களில் மின்சார தேவை குறையும் போது, மின்உற்பத்தி எந்திரங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. நேற்று அனல்மின்நிலையத்தில் உள்ள 3-வது மின்சார உற்பத்தி எந்திரம் நிறுத்தப்பட்டது. இதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது. மற்றபடி 4 மின்உற்பத்தி எந்திரங்களும் வழக்கம் போல் இயங்கின.
Related Tags :
Next Story