திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில்8-வது நடைமேடை திறப்பு


திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில்8-வது நடைமேடை திறப்பு
x

திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் 8-வது நடைமேடை திறக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில்நிலையத்தில் 8-வது நடைமேடை திறக்கப்பட்டது.

8-வது நடைமேடை

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். பயணிகள் வருகை மற்றும் ரெயில்கள் அதிகரிப்பு காரணமாக ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 8-வது நடைமேடை அமைக்கப்பட்டது.

ரூ.13 கோடியே 5 லட்சம் செலவில் 620 மீட்டர் நீளத்தில் இந்த நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 26 பெட்டிகள் கொண்ட ரெயில் இந்த நடைமேடையில் நிற்க வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கல்லுக்குழி பாதை வழியாக வந்தால் சுரங்கப்பாதையோ, நடைமேம்பாலத்துக்கோ செல்லாமல் நேரடியாக 8-வது நடைமேடைக்கு வந்து விடலாம். 8-வது நடைமேடை தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது.

சோழன் எக்ஸ்பிரஸ்

இந்த நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நடைமேடையில் இருந்து சோழன், ராமேசுவரம், திருச்செந்தூர், பனாரஸ் வாராந்திர ரெயில், அந்தியோதயா விரைவு ரெயில் உள்பட பல ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story