திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்


திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் 8-வது ஆண்டு முன்னாள் மாணவியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச் செல்வி தலைமை தாங்கினார். முன்னாள் மாணவியர் சங்க ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியையுமான சுமதி வரவேற்று பேசினார். முன்னாள் மாணவி சண்முகப்பிரியா கலந்து கொண்டு, இருதய நோய் அறுவை சிகிச்சைக்குபின் கவனிப்பு முறை குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சிகளை 4-ம் ஆண்டு மாணவிகள் பொன்சினேகா, சிங்கப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். களப்பயிற்சி ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார். இதில் முன்னாள் மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story