பூதப்பாடி, கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.52½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


பூதப்பாடி, கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.52½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 15 Jun 2023 3:33 AM IST (Updated: 15 Jun 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

பூதப்பாடி, கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.52½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

ஈரோடு

பூதப்பாடி, கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.52½ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

பூதப்பாடி

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இதற்கு 8ஆயிரத்து 861 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய தேங்காய் ஒன்று ரூ.6.10-க்கும் பெரிய தேங்காய் ஒன்று ரூ.11.65-க்கும் என மொத்தம் ரூ.67ஆயிரத்து 313-க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய் 79 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.6ஆயிரத்து 989-க்கும், அதிகபட்சமாக ரூ.8ஆயிரத்து 55-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 836-க்கு விற்பனையானது.

நிலக்கடலை

நிலக்கடலை 167 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து209-க்கும், அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்து626-க்கும் என மொத்தம் ரூ.4லட்சத்து11ஆயிரத்து423-க்கு விற்பனையானது. நெல் 59மூட்டைகள் ஏலத்துக்கு வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.1,461-க்கும், அதிகபட்சமாக ரூ.2ஆயிரத்து804-க்கும் என மொத்தம் ரூ.84ஆயிரத்து867-க்கு ஏலம் போனது. எள் 15மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.13ஆயிரத்து249-க்கும், அதிகபட்சமாக ரூ.14ஆயிரத்து710-க்கும் என மொத்தம் ரூ.1லட்சத்து 19ஆயிரத்து 614-க்கு விற்பனையானது.

ரூ.9¼ லட்சத்துக்கு ஏலம்

மக்காச்சோளம் 14மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.1,759-க்கும், அதிகபட்சமாக ரூ.1,867-க்கும் என மொத்தம் ரூ.19ஆயிரத்து 510-க்கு விற்பனையானது. ராகி 10 மூட்டைகள் வந்தன. இது (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து49-க்கும், அதிகபட்சமாக ரூ.2ஆயிரத்து 270-க்கும் என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 159-க்கு விற்பனையானது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.9லட்சத்து37ஆயிரத்து 723-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொடுமுடி

இதேபோல் சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 23 ஆயிரத்து 930 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.16.55-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.21.65-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 656-க்கு விற்பனை ஆனது. 372 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.73.69-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.76.90 காசுக்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.60.75-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.74.19-க்கும் என மொத்தம் ரூ.11 லட்த்து 92 ஆயிரத்து 828-க்கும் விற்பனை செய்யப்பட்டது. எள் 232 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.126.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.148.29-க்கும் என மொத்தம் ரூ.23 லட்சத்து 56 ஆயிரத்து 326-க்கு விற்கப்பட்டது. விவசாய விளைபொருட்கள் ரூ.37 லட்சத்து 17 ஆயிரத்து 810-க்கு ஏலம் போனது.

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 4 ஆயிரத்து 200 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.12.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.20.11-க்கும் என மொத்தம் ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. கொப்பரை தேங்காய் 80 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 789-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 339-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 477-க்கு விற்பனை செய்யப்பட்டது. 44 மூட்டைகளில் எள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.13 ஆயிரத்து 929-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.14 ஆயிரத்து 809-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

பூதப்பாடி, கொடுமுடி, அந்தியூ்ா ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.52 லட்சத்து 38 ஆயிரத்து 533-க்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.


Next Story