கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.89¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.89¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
கொடுமுடி
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.89¼ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
ஏலம்
சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
7 ஆயிரத்து 627 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று 19 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 15 காசுக்கும் என மொத்தம் ரூ.62 ஆயிரத்து 470-க்கு விற்பனை ஆனது.
கொப்பரை தேங்காய்
விவசாயிகள் 461 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 29 காசுக்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய் 65 காசுக்கும், அதிகபட்ச விலையாக 81 ரூபாய் 59 காசுக்கும் என மொத்தம் ரூ.16 லட்சத்து 36 ஆயிரத்து 428-க்கு விற்பனை செய்யப்பட்டது.
எள்
659 மூட்டைகளில் எள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று 139 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 169 ரூபாய் 99 காசுக்கும் என மொத்தம் ரூ.72 லட்சத்து 23 ஆயிரத்து 638-க்கு விற்கப்பட்டது.
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.89 லட்சத்து 22 ஆயிரத்து 536-க்கு ஏலம் போனது.