கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x
தினத்தந்தி 20 Oct 2023 2:39 AM IST (Updated: 20 Oct 2023 2:40 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது

ஈரோடு

சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.27 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்களான தேங்காய் மற்றும் ெகாப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 5 ஆயிரத்து 715 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18.19-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.29-க்கும் என மொத்தம் ரூ.43 ஆயிரத்து 603-க்கு விற்பனை ஆனது.கொப்பரை தேங்காய்களை 698 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.79.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.64.35-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.81.79-க்கும் என மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 811-க்கு விற்பனை செய்யப்பட்டது. விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.27 லட்சத்து 6 ஆயிரத்து 414-க்கு ஏலம் போனது.


Next Story