மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி


மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி
x

மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

மதுரை

தென் மாவட்டங்களில் முக்கிய மார்க்கெட்டாக, மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. அதன் பின்னர் இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகிறது. இதுபோல் மதுரையில் உள்ள சில்லறை வியாபாரிகளும் இந்த மார்க்கெட்டுக்கு வந்து தான் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.35-க்கு விற்பனையானது.. கடந்த மாதத்தில் முருங்கைக்காயின் விலை ரூ.200 என இருந்தது. ஆனால், தற்போது அதன் விலை படிப்படியாக குறைந்து ரூ.35-ஐ தொட்டிருக்கிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், " மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வலையப்பட்டி போன்ற இடங்களில் இருந்தும், குஜராத், மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சீசனை பொறுத்து தினமும் 15 டன் முதல் 20 டன் வரை முருங்கைக்காய் விற்பனைக்காக வருகின்றன.

சீசன் இல்லாத சமயத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை செல்லும். தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளது"என்றனர்.


Next Story