தகட்டூரில், மைல்கல்லிற்கு பூஜை செய்த நெடுஞ்சாலை பணியாளர்கள்
ஆயுதபூஜையையொட்டி தகட்டூரில், மைல்கல்லிற்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பூஜை செய்தனர்
நாகப்பட்டினம்
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பகுதியில் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் மைல்கல் உள்ளது. ஆயுதபூஜையையொட்டி அந்த மைல்கல்லை தண்ணீரால் சுத்தம் செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து மாலை அணிவித்து, தங்களது உபகரணங்களை வைத்து நெடுஞ்சாலை பணியாளர்கள் தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார், உட்கோட்ட செயலாளர் வேம்பையன், பொருளாளர் வேதரத்தினம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story