சிவகிரி, அவல்பூந்துறை, கவுந்தப்பாடியில் ரூ.21 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
சிவகிரி, அவல்பூந்துறை, கவுந்தப்பாடியில் ரூ.21லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
சிவகிரி, அவல்பூந்துறை, கவுந்தப்பாடியில் ரூ.21லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
சிவகிரி
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 222 மூட்டைகளில் எள்ளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இதில் கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 89 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 124 ரூபாய் 42 காசுக்கும் ஏலம் போனது. சிவப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 88 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 139 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 16,459 கிலோ எடையுள்ள எள் 19 லட்சத்து 89 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனையானது.
அவல்பூந்துறை
இதேபோல் மொடக்குறிச்சி அருகே உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 11,723 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்கள். இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 76 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 88 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 17 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 4,600 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 1 லட்சத்து 5 ஆயிரத்து 775 ரூபாய்க்கு தேங்காய் விற்பனையானது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 405 கிலோ எடையுள்ள 995 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய்க்கும் என மொத்தம் 10 ஆயிரத்து 17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சிவகிரி, அவல்பூந்துறை, கவுந்தப்பாடியில் ரூ.21 லட்சத்து 5 ஆயிரத்து 64-க்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.