பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி- குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்


பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி-  குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்
x

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண் லேசான காயமடைந்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதற்கிடையில் குழந்தையுடன் தவறி விழுந்த பெண் லேசான காயமடைந்தார்.

தேங்கி நிற்கும் மழைநீர்

பொள்ளாச்சியில் பழைய, புதிய பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து உடுமலை, பழனி, மதுரை பஸ்கள் வெளியே வரும் இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் தண்ணீர் வெளியே செல்வதற்கு சிறியதாக ஓட்டை உள்ளது. தற்போது மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதால் அந்த ஓட்டை(பள்ளம்) இருப்பது தெரிவதில்லை. இந்த நிலையில் அந்த இடத்தில் கால் தவறி குழந்தையுடன் பெண் ஒருவர் விழுந்ததில் லேசான காயமடைந்தார். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் உடுமலை வழியாக செல்லும் பஸ்கள் வெளியே வரும் இடத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் மழைநீர் செல்வதற்கு வசதியாக சிறியதாக ஒரு ஓட்டை உள்ளது. அந்த ஓட்டையும் மழை பெய்து அதிகளவு தண்ணீர் தேங்கினால் தெரிவதில்லை. இதனால் அந்த ஓட்டையில் காலை வைத்து தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

தற்போது தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே விபத்து மற்றும் நோய் பரவலை தடுக்க அதிகாரிகள் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைநீர் செல்வதற்கு அமைக்கப்பட்ட ஓட்டையின் மீது வலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story