தக்கலை, களியக்காவிளை போலீஸ் நிலையங்களில்டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு


தக்கலை, களியக்காவிளை போலீஸ் நிலையங்களில்டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை, களியக்காவிளை போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தக்கலை, களியக்காவிளை போலீஸ் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு நடத்தினார்.

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மதியம் தக்கலை போலீஸ் நிலையத்தில் ஆய்வு ேமற்கொண்டார். போலீஸ் நிலையம் வந்த அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தக்கலை துணை சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் டி.ஜி.பி. போலீஸ் நிலையத்தின் உள்பகுதியில் உள்ள அறைகளை பார்வையிட்டு குற்ற ஆவணங்கள், புகார் பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, பொதுமக்கள் அமருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய இருக்கை வசதிகள், ஓவியங்கள், குற்ற வழக்குடைய வாகனங்களை வரிசையாக ஒழுங்குபடுத்தி நிறுத்தி இருந்தது, தரையில் பதிக்கப்பட்டிருந்த அலங்கார கற்கள் போன்றவற்றை பார்வையிட்டார்.

பாராட்டு

தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் தென்னை மரகன்று நட்டார். அப்போது போலீஸ் நிலையத்தை தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியனை பாராட்டினார். தொடர்ந்து சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், 'போலீஸ் நிலையத்தை தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்கிறார்கள். இதை மற்ற போலீஸ் நிலையங்கள் அறிவதற்கான படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறேன்' என்றார்.

களியக்காவிளை

இதுபோல் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி அவர் போலீஸ் நிலைய வளாகத்தில் மரகன்றுகள் நட்டார். மேலும் போலீஸ் நிலையத்தில் பதிவேடுகளை சிறந்த முறையில் பராமரித்த நிலைய எழுத்தர் குமாருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார். போலீஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்த அதிகாரிகளை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிந்தாமணி, முத்துகுமரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story