பெரியகுளம் மார்க்கெட்டில்தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை
பெரியகுளம் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.
தேனி
தக்காளி விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. பெரியகுளத்தில் அதிக பட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக விலை படிப்படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று கிலோ ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.60-க்கு விற்பனையானது. மேலும் சிறிய ரக தக்காளி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், சின்ன வெங்காயமும் விலை குறைந்து நேற்று ஒரு கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை வீழ்ச்சியால் பல நாட்களாக தக்காளி, வெங்காயம் வாங்க முடியாமல் தவித்த பெரியகுளம் மக்கள் நேற்று காலை காய்கறி மார்க்கெட்டில் குவிந்தனர். அவர்கள் அதிக அளவிலான தக்காளி, சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர். மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story