எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடும் விதிமீறல்


எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடும் விதிமீறல்
x

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடும் விதிமீறல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் தங்களது எலக்ட்ரிக் (மின்சாரம்) ஸ்கூட்டரின் பேட்டரிக்கு வீட்டில் சார்ஜ் போடாமல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து சார்ஜ் போடும் விதிமீறல் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிறைய இடங்களில் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போடும் போது, அவை வெடிப்பதும், திடீரென்று தீப்பிடித்து எரிவதும் போன்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் பொதுமக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக ஜெராக்ஸ் போட கூட ஊழியர்கள் அனுமதிக்கமாட்டார்கள். எனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்ட ஊழியர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story