பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி


பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி
x
தினத்தந்தி 28 Aug 2023 12:30 AM IST (Updated: 28 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி நேற்று நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு காட்சி நேற்று நடைபெற்றது.

ஆவணி திருவிழா

கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனை அம்பாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மதியம் சுவாமி-அம்பாள், சகல மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள், அம்மன் வீதி உலா வருதல் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 25-ந் தேதி நடைபெற்றது.

தபசு காட்சி

விழாவில் சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு காட்சி 13-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 10 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள், முகலிங்கநாதர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மதியம் 2.15 மணிக்கு மேல் ஒப்பனை அம்பாள் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டபத்தில் எழுந்தருளினார்.

மாலை 6.15 மணிக்கு மேல் சுவாமி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு நடக்கும் பந்தலுக்கு எழுந்தருள், தொடர்ந்து சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வரும் வருதல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.40 மணிக்கு ஒப்பனையம்மாளுக்கு ரிஷப வாகனத்தில் முகலிங்கநாதராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 10.15 மணிக்கு மேல் பால்வண்ணநாதராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

திரளான பக்தர்கள்

இதில் சங்கரன்கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி, பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் மற்றும் சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.





Next Story