நீடாமங்கலத்தில், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


நீடாமங்கலத்தில், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:46 PM GMT)

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில், வருவாய் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன், வட்ட துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், கிராமநிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் சரக அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக வட்டச்செயலாளர் வீரமணி வரவேற்றார். முடிவில் வட்டப்பெருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story