மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு; 2 நாட்கள் நடக்கிறது


மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான   2-ம் கட்ட கலந்தாய்வு; 2 நாட்கள் நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:47 AM IST (Updated: 10 Jun 2023 7:58 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.

ஈரோடு

மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.

2-ம் கட்ட கலந்தாய்வு

மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், பி.காம். வணிகவியல், பி.காம். சி.ஏ. வணிகவியல் கணினி பயன்பாடு, பி.பி.ஏ. சி.ஏ. வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு, மொழி பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடங்களுக்கு, ஏற்கனவே இணையவழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாத மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

வருகிற 14-ந்தேதி மேற்கண்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற்று காலியாக உள்ள இடங்களில் மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்து கொள்ள கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தரவரிசை பட்டியல்

இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்து முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறியவர்களுக்கு அழைப்பானை, மாணவர்கள் விண்ணப்பித்தபோது வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். இதில் ஏற்கனவே TNGASA என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கலந்து கொள்ள தவறிய அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் மற்றும் அரசின் இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை வழங்கப்படும்.

கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவ-மாணவிகள் உரிய நாட்களில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளிக்கூட மாற்றுச்சான்றிதழ் நகல், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், தங்களுடைய 2 புகைப்படம் மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 5 படிவம் மற்றும் கல்லூரி கட்டணத்துடன் நேரடியாக கல்லூரிக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும். மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு விவரங்கள் www.gascm.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தரவரிசை பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் எபெனேசர் தெரிவித்துள்ளார்.


Next Story