கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக விண்கற்கள் காணும் தினம்


கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக விண்கற்கள் காணும் தினம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் உலக விண்கற்கள் காணும் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் தூத்துக்குடி வான் அறிவியல் கழகம் சார்பில் உலக விண்கற்கள் காணும் தினத்தை முன்னிட்டு தொலைதூரத்தில் உள்ள பொருட்களை டெலஸ்கோப் மூலம் மாணவர்கள் பார்வையிடும் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி வான் அறிவியல் கழகத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கலந்து கொண்டு, தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்ப்பது குறித்தும், விண்கற்கள் தொடர்பாகவும் பயிற்சியளித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அருள் காந்தராஜ், ஜோதி, டாரதி செல்வின், கணேசன், மகாதேவி, ஆகாஷ் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story