கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறையில்விவசாய விளைபொருட்கள் ரூ.23½ லட்சத்துக்கு ஏலம்


கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறையில்விவசாய விளைபொருட்கள் ரூ.23½ லட்சத்துக்கு ஏலம்
x

கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறையில் நடந்த ஏலத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.23லட்சத்து 63 ஆயிரத்து 863-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு

கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறையில் நடந்த ஏலத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.23லட்சத்து 63 ஆயிரத்து 863-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொடுமுடி

கொடுமுடி சாலைப்புதூரில் இயங்கிவரும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் மொத்தம் 6 ஆயிரத்து 993 தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இது (கிலோ) குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 19 ரூபாய் 49 காசுகளுக்கும், அதிகபட்சமாக 26 ரூபாய் 49 காசுகளுக்கும் என மொத்தம் 61 ஆயிரத்து 194 ரூபாய்க்கு விற்பனையானது.

இதேபோல் 503 மூட்டைகளில் கொப்பரைத் தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் (கிலோ) குறைந்தபட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுகளுக்கும், அதிகபட்சமாக 81 ரூபாய் 49 காசுகளுக்கும், 2-ம் தரம் 60 ரூபாய் 12 காசுகளுக்கும், அதிகபட்சமாக 78 ரூபாய் 69 காசுகளுக்கும் என மொத்தம் 18 லட்சத்து 60 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனையானது. கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளை பொருட்கள் 19 லட்சத்து 21 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சிவகிரி

இதேபோல் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 91 மூட்டைகளில் நிலக்கடலை கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 64 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 50 காசுக்கும் என மொத்தம் 2 ஆயிரத்து 751 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காய் 2 லட்சத்து 11 ஆயிரத்து 572 ரூபாய்க்கு விற்பனையானது.

அவல்பூந்துறை

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 85 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 79 ரூபாய் 15 காசுக்கும், அதிகபட்ச விலையாக 80 ரூபாய் 40 காசுக்கும், 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 60 காசுக்கும், அதிகபட்ச விலையாக 75 ரூபாய் 15 காசுக்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 401-க்கு ஏலம் போனது.

இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சதீஷ் தெரிவித்தார்.

கொடுமுடி, சிவகிரி, அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நடந்த ஏலத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.23லட்சத்து 63 ஆயிரத்து 863-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story