கொடுமுடி, அந்தியூர், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.39 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


கொடுமுடி, அந்தியூர், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.39 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
x

கொடுமுடி, அந்தியூர், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.39 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்போனது.

ஈரோடு

கொடுமுடி, அந்தியூர், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.39 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்போனது.

கொடுமுடி

கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூரில் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனைக்கூடத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 133 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் நிலக்கடலை (கிலோ) ஒன்று குறைந்தபட்சமாக ரூ.68.25-க்கும், அதிகபட்சமாக ரூ.79.40-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 765-க்கு ஏலம் போனது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 146 மூட்டைகளில் நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர். இதில் பச்சை நிலக்கடலை (குவிண்டால்) ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 450-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.4 ஆயிரத்து 100-க்கும் விற்பனையானது. காய்ந்த நிலக்கடலை குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 319-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 619-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 755-க்கு நிலக்கடலை ஏலம்போனது.

சிவகிரி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 1,441 மூட்டைகளில் விவசாயிகள் நிலக்கடலையை கொண்டு வந்திருந்தனர். இதில் நிலக்கடலை (கிலோ) குறைந்தபட்ச விலையாக ரூ.64.49-க்கும், அதிகபட்சமாக ரூ.82.19-க்கும், சராசரி விலையாக ரூ.73.19-க்கும் என மொத்தம் ரூ.32 லட்சத்து 71 ஆயிரத்து 863-க்கு ஏலம்போனது.

கொடுமுடி, அந்தியூர், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.39 லட்சத்து 11 ஆயிரத்து 383-க்கு நிலக்கடலை ஏலம்போனது.


Related Tags :
Next Story