கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.25¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.25¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.25¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.
கொடுமுடி
சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 9 ஆயிரத்து 380 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விைலயாக 26 ரூபாய் 85 காசுக்கும் என மொத்தம் ரூ.81 ஆயிரத்து 502-க்கு விற்பனை ஆனது.
454 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 81 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 79 காசுக்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக 62 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 49 காசுக்கும் என மொத்தம் ரூ.17 லட்சத்து 39 ஆயிரத்து 608-க்கு விற்பனை செய்யப்பட்டது. எள் 19 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 147 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 162 ரூபாய் 99 காசுக்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரத்து 963-க்கு விற்கப்பட்டது.
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ெமாத்தம் ரூ.20 லட்சத்து 45 ஆயிரத்து 73-க்கு ஏலம் போனது.
அந்தியூர்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 3 ஆயிரத்து 852 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக 16 ரூபாய் 76 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 16 காசுக்கும் என மொத்தம் ரூ.53 ஆயிரத்து 543-க்கு விற்பனை ஆனது.
29 மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 389-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 260-க்கும் என மொத்தம் ரூ.64 ஆயிரத்து 263-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 4 மூட்டைகளில் உழுந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 719-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 219-க்கும் என மொத்தம் ரூ.18 ஆயிரத்து 458-க்கு விற்கப்பட்டது. பாசிப்பயறு 4 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 829-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 560-க்கும் என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 968-க்கு விற்பனை ஆனது.
ரூ.25¾லட்சம்
5 மூட்டைகளில் அவரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 803-க்கும், அதிகபட்ச விைலயாக ரூ.8 ஆயிரத்து 279-க்கு என மொத்தம் ரூ.21 ஆயிரத்து 529-க்கு விற்பனை செய்யப்பட்டது. கொள்ளு 18 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 479-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 819-க்கும் என மொத்தம் ரூ.57 ஆயிரத்து 213-க்கு விற்கப்பட்டது. 68 மூட்டை துவரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 448-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 968-க்கும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 386-க்கு விற்கப்பட்டது.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.5 லட்சத்து 26 ஆயிரத்து 360-க்கு ஏலம் போனது. கொடுமுடி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.25 லட்சத்து 71 ஆயிரத்து 433-க்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.