கழுகுமலை பள்ளியில் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி


கழுகுமலை பள்ளியில் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வெள்ள பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை தீயணைப்பு துறை சார்பில் வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெள்ள பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வரவேற்றார். தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர், மாணவ, மாணவியருக்கு மழை காலங்களில் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பிக்கும் வழி முறைகள் குறித்தும், தாழ்வான பகுதிகளுக்கு செல்ல கூடாது எனவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வழிமுறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் செல்லத்துரை, கனகராஜ், சிவசங்கர், ஜெகதீஷ், சரவணசெல்வன் ஆகியோர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.


Next Story