எழுமாத்தூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.37 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்


எழுமாத்தூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.37 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்
x

எழுமாத்தூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.37 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

ஈரோடு

எழுமாத்தூர், வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.37 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருளான கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,029 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.78.09-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.82.59-க்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.63.49-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.77.66-க்கும் என மொத்தம் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்து 666-க்கு விற்பனை ஆனது.

சென்னிமலை

இதேபோல் சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.

இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.77-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

மொடக்குறிச்சி, வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 89 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது.


Next Story