ஈரோட்டில்கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில்கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்

ஈரோடு

ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், நலவாரியம் மூலமாக வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். 60 வயது அடைந்ததும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story